கட்ட மீசை, சிக்ஸ்பேக் உடல் என மிரட்டும் சீயான்60 துருவ் விக்ரம்.. அப்பா எட்டடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாய்கிறாரே!

121

துருவ் விக்ரம்…

விக்ரம் தனது 60வது படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை யார் இயக்குகிறார்கள், யார் இசையமைப்பாளர் என்கிற விவரத்தை படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிட்டுள்ளார்.

விக்ரம் நடிக்கும் சியான்60 வது படத்தை பேட்ட, ஜகமே தந்திரம் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள செய்தி அதிகாரப்பூர்வமாக வெளி வந்துள்ளது. இதில் நீண்ட நாட்கள் கழித்து விக்ரம் கேங்ஸ்டர் படத்தில் நடிக்க உள்ளது போஸ்டரிலேயே தெரிகிறது.

அதே போல் இந்த படத்தில் விக்ரமுடன் சேர்ந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தை எழுதி இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். துருவ் விக்ரம் நடித்த முதல் படமே ரசிகர்களிடம் வரவேற்பை பெறத் தவறியது.

இத்தனைக்கும் அந்த படத்தை பார்த்து பார்த்து ரெடி செய்தவர் விக்ரம் தான். நடிப்புக்கு பாராட்டு கிடைத்தாலும் படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.

இதனால் எப்படியாவது தன்னுடைய மகன் துருவ் விக்ரமுக்கு ஒரு வெற்றிப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக அவருக்கு வில்லனாக சீயான் 60 படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

மேலும் முந்தைய படங்களில் சாக்லேட் பாய் வேடத்தில் வந்த துருவ் விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் முற்றிலுமாக தன்னுடைய தோற்றத்தை மாற்றி கட்டுமஸ்தான உடல் அமைப்புடன் நடித்து வருகிறார்.

அப்பா எட்டடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாய்கிறார் என இப்போது கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. அந்த அளவுக்கு தன்னுடைய தோற்றத்தை கரடுமுரடாக மாற்றியுள்ள துருவ் விக்ரம் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.