ரஜினி கொடுத்த ஐடியா.. விஜய் சேதுபதிக்கு கோடி கோடியா பணம் கொட்ட காரணம் இதுதான்!

110

விஜய் சேதுபதி…

இந்திய சினிமாவே கவனிக்கப்படும் ஹீரோவாக வலம் வரும் விஜய் சேதுபதி சமீபகாலமாக அதிக அளவுக்கு படங்களில் நடித்து சம்பாதிப்பதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த ஐடியா தான் என கோலிவுட்டில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

ஹீரோவாக தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி நடிகராக வலம் வந்த விஜய் சேதுபதிக்கு விஜய்யுடன் நடித்த மாஸ்டர் படம் ஏகப்பட்ட வரவேற்பை கொடுத்துள்ளது. பவானி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது நிற்கக் கூட நேரமில்லாத அளவுக்கு கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.

மேலும் ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி வைத்துள்ளார் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் சின்னச் சின்ன கதாபாத்திரம் கிடைத்தாலும் நடிப்பதால் தான் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன எனவும் கூறுகின்றனர்.

விஜய் சேதுபதி இப்படி ஓடி ஓடி உழைப்பதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஐடியாதான். பேட்ட படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது மார்க்கெட் இருக்கும் போதே முடிந்தவரை நடித்து சம்பாதித்து சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் என விஜய் சேதுபதிக்கு அட்வைஸ் கொடுத்தாராம் ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு விஜய் சேதுபதியும் மிகவும் பிடிக்கும் என பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையிலேயே தெரிவித்தார். விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், லாபம் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

அதுமட்டுமில்லாமல் தற்போது ஹிந்தியில் வெப்சீரிஸ் ஒன்றிலும், மும்பைக்கார் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் அவரைத் தொடர்ந்து கேட்டு வருகின்றனர் என்பதும் கூடுதல் தகவல்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டியதுதான்!