ஷாருக் கான் படத்திற்காக இயக்குனர் அட்லீ போடும் மாஸ்டர் பிளான், முக்கிய வீடியோவை வெளியிட்ட அவரின் மனைவி!!

704

அட்லீ……

இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக விளங்குபவர், இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான நான்கு திரைப்படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் திரைப்படத்திலே பெரிய வெற்றியை அடைந்து அனைவர்க்கும் பிடித்த இயக்குனராக மாறினார்.

அதனை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கூட்டணி சேர்ந்து அட்லீ தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட மூன்று பிளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரானார்.

இந்நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகிற்கு நுழையவுள்ள அட்லீ, தனது முதல் திரைப்படத்திலே நடிகர் ஷாருக் கானை வைத்து இயக்கவுள்ளார்.

மேலும் இதனை உறுதி செய்யும் வகையில் தற்போது அவரின் மனைவி ப்ரியா அட்லீ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆம், அதில் அட்லீ கையில் ஹெலிகாப்டர் மற்றும் கார் பொம்மைகளை வைத்து கொண்டு படக்குழுவுடன் கலந்துரையாடுகிறார்.