விஜய்க்காக கண்கலங்கி கதறி அழுத ஹிந்தி நடிகை – உருக்கமான பேச்சு!!

739

கங்கனா ரனாவத்…

தமிழ் திரையுலக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று தலைவி.

ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில், ஏ.எல். விஜய் இயக்கத்தில், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ள படம் தான் இது.

இதில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, நடிகர் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தலைவி படத்தின் ட்ரைலர் லான்ச் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை கங்கனா ரனாவத் பல விஷயங்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

அதிலும் ” எனது திறமைக்கு பற்றி நன்றாக அறிந்துகொண்ட இயக்குனர் விஜய் மட்டும் தான். வேறு எந்த ஒரு இயக்குனரும் இவரைப்போல் கிடையாது ” என கண்கலங்கி அழுது பேசினார்.