குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் அஷ்வினுக்கு அடித்த லக்- எதில் நடித்துள்ளார் தெரியுமா?

61

அஷ்வின்…

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தான் இப்போது மக்களின் பெரிய பேச்சாக உள்ளது. எவ்வளவு மன கஷ்டத்தில் இருந்தாலும் அவர்களை சிரிக்க வைக்கும் ஒரு பெரிய நிகழ்ச்சியாக உள்ளது.

சமையல் போட்டி என்றாலும் சிரிப்புக்கு நிகழ்ச்சியில் பஞ்சமே இல்லை. அரைஇறுதி போட்டி நடந்துமுடிந்து இந்த வாரம் Wild Card நடக்க இருக்கிறது.

இந்த வாரத்திற்கான புரொமோவும் வெளியாகிவிட்டது, படு காமெடியாக இருக்கும் என இப்போதே தெரிகிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய ரீச் பெற்றவர் அஷ்வின். அவர் சில சீரியல் நடித்தாலும் பெரிய வரவேற்பு ஒன்றும் கிடைக்கவில்லை.

தற்போது இந்நிகழ்ச்சியை தொடர்ந்து அஷ்வின் ஒரு மாஸ் பாடல் ஆல்பத்தில் நடித்துள்ளாராம். அந்த ஆல்பம் பாடலின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.