‘தளபதி 65’ படத்தின் நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு!

95

தளபதி 65…

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை நெல்சன் திலிப்குமர் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தேர்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்ததாகவும்,

ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் இந்த படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் பூஜா ஹெக்டே நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறின.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளிவர இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பு சற்றுமுன் வெளியான நிலையில் இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் பூஜா ஹெக்டேவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ ஒன்றையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.