வலிமை படம் இப்படித்தான் இருக்கும்.. முதல்முறையாக வாய்திறந்த போனி கபூர்!

101

போனி கபூர்………..

ஒரு வருடத்திற்கு மேலாக வலிமை படத்தை தயாரித்து கொண்டிருந்தாலும் அதைப்பற்றி எந்த ஒரு அறிவிப்பும் விடாமல் தல ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த போனி கபூர் தற்போது தல ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார்.

அதற்கு காரணம் கடந்த சில வாரங்களாக செல்லும் இடமெல்லாம் போனி கபூர் வலிமை படத்தைப் பற்றி பேசி வருவது தான். முன்னதாக வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தல அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் பத்திரிகை பேட்டி ஒன்றில் வலிமை படம் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி ஒரு அவுட்லைன் கொடுத்துள்ளார். இது தல ரசிகர்களை ஏகத்திற்கும் குஷிப்படுத்தியுள்ளது.

தல அஜித் ரசிகர்கள் பெரும்பாலும் வலிமை படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் படம் அப்படி இல்லையாம். வலிமை படத்தில் ஆக்ஷன் காட்சிகளை விட செண்டிமென்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அதற்காக ஆக்ஷனிலும் குறை வைக்கவில்லை. சென்டிமென்ட் ஆக்ஷன் கலந்த பக்கா கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்மெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது என வலிமை படத்தைப் பற்றிய அறிவிப்பை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் போனி கபூர்.

தல அஜித் சமீபகாலமாக தன்னுடைய படங்களில் ஆக்ஷன் காட்சிகள் இல்லை என்றாலும் முடிந்த அளவு செண்டிமெண்ட் காட்சிகள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம். அதற்கு காரணம் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற படங்கள் பெருமளவு அஜித்துக்கு பெண் ரசிகர்களையும் குழந்தை ரசிகர்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது தான் காரணம் என்கிறார்கள் அஜித் வட்டாரங்கள்.