நடிகர் விஜய்யுடன் தளபதி 65 கதாநாயகி பூஜா ஹேக் டே எடுத்துக்கொண்ட புகைப்படம்..!

114

பூஜா ஹேக்டே…

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் அமைத்திருக்கும் கூட்டணி, தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தளபதி 65.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளநிலையில், அனிருத் தளபதி 65 படத்திற்கு இசையமைக்கிறார்.

ஆனால் தளபதி 65 படத்தின் கதாநாயகி யாரென்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்துகொண்டே தான் வந்தது.

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று, இப்படத்தின் கதாநாயகி நடிகை பூஜா ஹேக் டே என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹேக் டே கடந்த 8 வருடங்களுக்கு முன் தளபதி விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு பூஜா ஹேக் டே முதல் முதலில் தமிழில் நடித்த, முகமூடி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.