பூஜா ஹெக்டே போதாது, அந்த சிரிப்பழகி நடிகையும் வேண்டுமாம்…. யார் அந்த நடிகை?

147

தளபதி 65……..

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் தளபதி 65 எனும் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்புகள் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தளபதி 65 படம் முக்கால்வாசி ரஷ்யாவில் படமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக சமீபத்தில் நெல்சன் ரஷ்யாவுக்கு சென்று லொகேஷன் பார்த்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பூஜா ஹெக்டே தான் என்ற பதிலை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இருந்தாலும் தளபதி 65 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே தான் நடிக்க போகிறார் என்பது ஓரளவு ரசிகர்கள் மத்தியில் தெரிந்திருந்த நிலையில் அப்டேட் வந்த சில மணி நேரங்களிலேயே வேறு வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர்.

இங்குதான் கதையில் ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளார் நெல்சன். தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மட்டுமில்லாமல் இன்னொரு நடிகையும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். அதில் பெரும்பாலும் இளம் ரசிகர்களின் சென்சேஷன் நாயகியாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனாவாக இருக்கலாம் என்கிறார்கள் சன் பிக்சர்ஸ் வட்டாரங்கள்.

ஆனால் தளபதி 65 படத்தின் அறிவிப்பு வெளியானபோது விஜய்சேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரன் ஆகா, ஓகோ என்று ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியதை பார்க்கையில் ஒருவேளை அவராக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எது எப்படியோ, தளபதி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க போகிறார் என்பது மட்டும் உறுதி.

விஜய் படங்களில் சமீபகாலமாக ஹீரோயின்களுக்கு சுத்தமாக முக்கியத்துவம் இல்லை என்ற கருத்து அதிகமாக வலம் வரும் நிலையில் தளபதி 65 படம் இதை மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.