எனக்கு தங்கை பிறந்திருக்கின்றார்: 19 வயது ‘வாணி ராணி’ சீரியல் நடிகை மகிழ்ச்சி!

88

நேஹா………

தமிழ் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்த கொரோகா காலகட்டத்தில் ஏகப்பட்ட புதிய புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சன் தொலைக்காட்சியில் தான் அதிகபடியான சீரியல்கள் ஓடுகிறது, இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்த தொலைக்காட்சியில் கடந்த 2013ம் ஆண்டு ஒளிபரப்பாகி இல்லதரசிகளின் மிகப்பெரிய ஆதரவை பெற்றது வாணி ராணி சீரியல். ராதிகா இரட்டை வேடங்களில் நடித்து அவரே தயாரித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது.

இந்த சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் தேனு. இவரின் நிஜ பெயர் நேஹா. பைரவி என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதன்பிறகு பிள்ளை நிலா, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். 19 வயதாகும் இவருக்கு இப்போது ஒரு தங்கை பிறந்துள்ளார்.

ஆமாம் இவரது அம்மா அண்மையில் கர்ப்பமாக இருந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளதாம். அந்த சந்தோஷ செய்தியை அவரே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.