மோகன் ராஜாவுக்கு அடித்த ஜாக்பாட்.. ஒன்னுக்கு ரெண்டா அள்ளிக்கொடுத்த பிரபல நடிகர்!

50

மோகன் ராஜா……….

தமிழ்சினிமாவில் ரீமேக் இயக்குனர் என ஒரு கட்டத்தில் அனைவராலும் கிண்டலடிக்கப்பட்ட மோகன் ராஜா தனக்கு சொந்தமாகவும் படம் எடுக்கத் தெரியும் என தனி ஒருவன் என்ற படத்தை எடுத்து அனைவரையும் மிரள வைத்தார்.

தனி ஒருவன் என்ற ஒரு படம் போதும், இன்னும் பல வருடங்களுக்கு மோகன் ராஜாவின் பெருமையைப் பேசும். மோகன் ராஜா கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அந்த படம் நினைத்த அளவு வெற்றியை பெறவில்லை.

இதனை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தை இயக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் மோகன் ராஜாவுக்கும் பிரசாந்த் தந்தை தியாகராஜனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்திலிருந்து விலகினார்.

ஆனால் உண்மையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படமொன்றில் பட வாய்ப்பு கிடைத்ததால் தான் மோகன் ராஜா அந்த படத்தில் இருந்து விலகியதாகவும் ஒரு செய்தி உள்ளது. ஆம், சிரஞ்சீவி தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லூசிபர் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இதுவே மோகன் ராஜாவுக்கு பெரிய ஜாக்பாட் தான். ஆனால் அதைவிட பெரிய ஆபர் ஒன்றை மற்றொரு தெலுங்கு முன்னணி நடிகர் மோகன் ராஜாவை கூப்பிட்டு கொடுத்துள்ளாராம். அவர் வேறு யாரும் இல்லை, நம்ம நாகர்ஜுனா தான்.

நாகர்ஜுனா மற்றும் அவரது மகன் அகில் இருவரும் இணைந்து ஒரு புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை மோகன் ராஜா தான் இயக்க வேண்டும் என பெரிய சம்பளம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக தமிழ் இயக்குனர்களை தெலுங்கு நடிகர்கள் வளைத்து போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.