விக்ரம் வேதா ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகர்!!

63

விக்ரம் வேதா…

மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தின் ரீமேக்கில் பாலிவுட் நடிகர் ஒருவர் இணைந்திருக்கிறார்.

மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், ‘விக்ரம் வேதா’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பாலிவுட்டில் இப்படம் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவனாக சயீப் அலிகானும், விஜய்சேதுபதியாக அமீர் கானும் நடிப்பதாக செய்திகள் வெளியானது.

பின்னர் ஒரு சில காரணங்களால் அமீர்கான் இப்படத்தில் இருந்து வெளியேறினார். தற்போது இவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஹிருத்திக் ரோஷனின் 25வது படமான இந்த படத்தில் அவர் விஜய் சேதுபதி நடித்த வேதா கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோடை விடுமுறையில் தொடங்க இருக்கிறார்கள்.