எம்.ஜி.ஆர் மகன் படத்தின் புதிய அப்டேட்.. என்ன தெரியுமா ?

535

எம்.ஜி.ஆர்.மகன்…

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எம்.ஜி.ஆர். மகன்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குனர் பொன்ராம். அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எம்.ஜி.ஆர் மகன்’.

சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இசையை இன்று வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.