கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு..!

56

சாந்தனு…

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருக்கும் சாந்தனு, தன்னை பற்றி சமூக வலைத்தளத்தில் வந்த கி.ண்.டல் பதிவுக்கு பதி.ல.டி கொடுத்து இருக்கிறார்.

விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகவும் எ.தி.ர்பா.ர்க்.கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது.

இப்படம் வெளியான பிறகு சமூக வலைத்தளத்தில் சில நெட்டிசன்கள் சாந்தனுவின் கதாபாத்திரத்தை ட்ரோல் செய்யும் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். தற்போது தேசிய விருது பற்றின ஒரு ட்ரோலுக்கு நடிகர் சாந்தனு பதிலளித்துள்ளார்.

அவர் கூறும் பொழுது “ஒருவரை இப்படி கேலி கிண்டல் செய்யும் பொழுது சிலருக்கு அற்பமான மகிழ்ச்சி கிடைக்கிறது போல. இந்த கிண்டல்களை பார்த்து எனக்கு சோர்வாகிவிட்டது.

ஆனாலும் என் மீது தெரிந்தோ தெரியாமலோ கற்களை வீசும் அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்களே சொல்லிட்டீங்க நடக்காமல் போய்விடுமோ.

ஒரு நாள் நிச்சயம் இது நடக்கும் அப்பொழுது எனது பதில் இதுவாகத்தான் இருக்கும். அன்புடன் பார்கவ்” என்று பெருந்தமையுடன் கூறியுள்ளார்.