அவரு கூட நடிக்க முடியாது.. 49 வயது முன்னணி நடிகரை ஒதுக்கிவைக்கும் சாய் பல்லவி!!

143

சாய்பல்லவி…

சாய்பல்லவியிடம் 49 வயது மதிக்கத்தக்க நடிகருடன் ரீமேக் படம் ஒன்றில் நடிக்க கேட்டதற்காக அவருடன் நடிக்க முடியாது என்று கூறியது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஒரு முன்னணி நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவை சேர்ந்தவராக இருந்தாலும் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாதான் தற்போது சாய்பல்லவிக்கு தாய் இடமாக உள்ளது. எக்கச்சக்கமாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அதுவும் சாய்பல்லவி இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டம் போடுவது எல்லாம் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது போல. இப்போதெல்லாம் முன்னணி நடிகர்களை விட சாய்பல்லவி நடனம் ஆடும் வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.

தெலுங்கில் ஏற்கனவே முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய்பல்லவி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுத்து விட்டாராம். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் நடித்து வருகின்றனர்.

இதில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவியை கேட்டதற்கு ஏதேதோ காரணம் சொல்லி மறுத்து விட்டாராம். ஆனால் சாய் பல்லவி உண்மையில் பவன்கல்யானின் வயதை மனதில் வைத்து தான் வேண்டாம் என்று சொன்னதாக டோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

இதை கேள்விப்பட்ட பலரும் மார்க்கெட் இருக்கும் போது இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதும், மார்க்கெட் இல்லாத போது வயதான நடிகர்களுக்கு ஜோடியாவதும் வழக்கம் தானே என சகஜமாக எடுத்துக் கொண்டார்களாம்.