பிரவீன்…

TRPயின் உச்சத்தில் இருக்கும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களின் வரிசையில் முக்கியமான இடத்தை பாரதி கண்ணம்மா சீரியல் பிடித்துள்ளது.

இதில் கதாநாயகியாக நடித்து வரும், அறிமுக நடிகை ரோஷினி, தமிழக ரசிகர்கள் மனதில் நடிகையாக இடம்பிடித்துள்ளார்.

சின்னத்திரையில் சூப்பர்ஹிட் சீரியலாக விளங்கி வரும் பாரதி கண்ணம்மா சீரியலை இயக்கி வருபவர் இயக்குனர் பிரவீன். இவர் இதற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி, ராஜா ராணி 1 உள்ளிட்ட சீரியலை இயக்கியுள்ளார்.

இயக்குனர் பிரவீன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த, நடிகை சாய் ப்ரமோதித்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் பிள்ளைகளை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



