பிளாக் பஸ்டர் இயக்குனர் அட்லீயா இது?- வேறொரு லுக்கில் மாறியுள்ளாரே, தெறி மாஸ்!!

73

அட்லீ…

தமிழ் சினிமாவின் ஆரம்பத்திலேயே உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கி வெற்றிக்கண்டவர் அட்லீ.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லீ இயக்கிய முதல் திரைப்படம் ராஜா ராணி. அதுவே சூப்பர் ஹிட், இரண்டாம் படத்திலேயே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

தெறி படத்தை தொடர்ந்து மெர்சல், பிகில் என தளபதியை வைத்து அடுத்தடுத்து படங்கள் இயக்கினார். தற்போது அட்லீ அடுத்தபடியாக பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை இயக்க இருக்கிறார்.

படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தான் தற்போது நடந்து வருகிறது என்கின்றனர். மற்றபடி படத்தை பற்றிய வேறெந்த தகவலும் தெரியவில்லை.

இந்த நேரத்தில் அட்லீயின் ஒரு சூப்பர் புகைப்படம் வெளிவந்துள்ளது. அதில் அட்லீ வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வேறொரு நபர் போல் காணப்படுகிறார்.

அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்களும் அசந்துபோய்விட்டார்கள்.