ஒரே ஒரு டுவிட் போட்டு அஜித் ரசிகர்களிடம் மோசமாக திட்டுவாங்கும் தொகுப்பாளினி பாவனா!!

1021

தொகுப்பாளினி பாவனா பிரபல தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியுள்ளார். அவரும், சிவகார்த்திகேயனும் இணைந்து தொகுத்து வழங்கிய நடன நிகழ்ச்சியை யாராலும் மறக்கவே முடியாது.

சமீபத்தில் கூட ரியோவுடன் இணைந்து நடன நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார், பின் டிவி பக்கம் காணவில்லை. அதற்கு பதிலாக விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பக்கம் சென்றுவிட்டார்.

இன்று அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறினார், பிறகு இன்னொரு தல மற்றொரு இடத்தில் விளையாடவுள்ளார் என டுவிட் போட்டார். இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் அவர் மட்டும் தான் தல வேறு யாரும் கிடையாது என மோசமாக திட்டி வருகின்றனர்.