காட்டுவாசி வேடத்தில் Enjoy Enjaami பாடலுக்கு வீடியோ வெளியிட்ட ஜுலி- என்னா ஒரு வீடியோ!!

127

ஜுலி………

சமூக வலைதளங்கள் மூலம் நிறைய விஷயங்கள் ஹிட்டாகியுள்ளது. அதிலும் சில பிரபலங்களின் பாடல்கள் மக்களிடம் பிரபலமாகிவிட்டது என்றால் போதும் பெரிய அளவில் டிரண்ட் ஆகிவிடும்.

அப்படி தான் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அவரது மகள் தீ பாட தயாரான பாடல் Enjoy Enjaami. பாடல் பெயரை கேட்டதுமே இப்பாடலை நீங்கள் பாட ஆரம்பித்திருப்பீர்கள்.

ஏனெனில் இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியுள்ளது. யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனால் பாடல் குழுவினர் செம ஹேப்பி.

இப்பாடலுக்கு நடனம் அமைத்து பிரபலங்கள் பலர் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் ஜுலியும் இப்பாடலுக்கு வீடியோ பதிவு செய்துள்ளார்.

அவர் காட்டு வாசி போல் ஒரு போட்டோ எடுக்க அதை வைத்து ஒரு ரசிகர் வீடியோ செய்துள்ளார். அதைத்தான் ஜுலி தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)