தளபதி 65 படத்தின் ஒப்பனிங் பாடல் இதுதான்.. படக்குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

82

தளபதி 65………

முன்னரெல்லாம் தளபதி விஜய்யின் புதிய படங்களை பற்றி முகம் தெரியாதவர்கள் தான் ரகசியங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது படங்களில் பணியாற்றுபவர்களே சில முக்கியமான விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் நடிப்பில் தளபதி 65 படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார். மேலும் முதற்கட்ட படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி65 படத்தில் பணியாற்றப்போகும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் போன்றவர்களை இயக்குனர் நெல்சன் உதவியுடன் தேர்வு செய்து வருகின்றனர். அந்தவகையில் தளபதி 65 படத்தில் ஒரு பாடலுக்கு ஜானி என்பவர் நடனம் அமைக்க உள்ளார்.

இதை படக்குழுவினர் சீக்ரெட்டாக தெரிவிக்கலாம் என நினைத்த நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தானே அறிவித்துக் கொண்டார். இதுகூட பரவாயில்லை மாஸ்டர் படத்தின் பாடல் எப்போது படமாக்கப்படும், எந்தெந்த தேதிகளில் படமாக்கப்படும் என்பதை எல்லாம் ஓபன் ஆக தெரிவித்துவிட்டார்.

தளபதி படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்டைலிஷான பாடல் ஒன்றின் ரிகர்சல் ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கும் எனவும் மேலும் அந்த பாடல் படப்பிடிப்பு மே 3 ஆம் தேதியிலிருந்து 9ஆம் தேதி வரை நடக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சன் வட்டாரம் கடுப்பில் இருப்பதாக தெரிகிறது. தளபதி படத்தில் ரஜினிக்கு ராக்கம்மா பாடல் எப்படி அமைந்ததோ அதேபோல் தளபதி விஜய்க்கு இந்த பாடல் அமையும் என்கிறார்கள் சன் வட்டாரங்கள். இப்பேர்பட்ட பாடலை சாதாரணமாக பப்ளிசிட்டி செய்து விட்டாரே என அப்செட்டில் இருக்கிறார்களாம்.