கணவர் சம்மதித்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்: தமிழ் நடிகை பதில்!

141

பிரியாமணி……

பிரபல தமிழ் நடிகை ஒருவரின் கிளாமர் புகைப்படங்களை பார்த்து என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ’எனது கணவர் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அந்த நடிகை பதில் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிராஜா இயக்கிய ’கண்களால் கைது செய்’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை ப்ரியாமணி.

அதன்பின்னர் பல தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த நடிகை பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரியாமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து இருந்தார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்த நிலையில் ரசிகர் ஒருவர் கமெண்ட்டில், ‘என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?

என்று கேட்க அதற்கு பதில் அளித்த பிரியாமணி ’எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, ஆனால் என் கணவரிடம் அனுமதி கேளுங்கள், அவர் சம்மதம் தெரிவித்தால் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.