மோகன்லால் இயக்கத்தில் முதல் முறையாக மலையாள சினிமாவில் தல அஜித்‌ ! படத்தின் பெயர் என்ன தெரியுமா?

92

அஜித்………..

வலிமை படத்தில் நடிக்கும் அஜித், ஏறத்தாழ 95 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இன்னும் 1 வாரம் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சி இருக்கிறது.

இந்த படத்தை பற்றின Update வராமல் காத்திருக்கும் ரசிகர்களுக்கு, வலிமை படத்தின் பிரமோஷன் பணிகள் மே 1 முதல் ஆரம்பிக்கும், அதாவது தலையின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதன் பணிகள் தொடங்கும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.

மேலும் படத்தை பார்த்த அஜித், படம் ரொம்ப கிளாஸ் ஆக இருக்கிறது என்றும் வெகுஜன பாமர மக்களுக்கும் படம் போய் சேரவேண்டும் என்பதற்காக சில காட்சிகளை வைக்கச் சொல்லி உள்ளார். மேலும் அடுத்த படத்தையும் H. வினோத் அவர்களையே இயக்க கூறியுள்ளார்.

ஆனால், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், தல அஜித் அடுத்ததாக மலையாள நடிகர் மோகன்லால் இயக்கும் ஒரு படத்தில் Cameo வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த படத்திற்கு Barroz என்று பெயர் வைத்துள்ளதாகவும் முழுக்க முழுக்க 3 டியில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்ததிரைப்படத்திற்கு லிடியன் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறாராம்.பிரபல மலையாள சினிமா நடிகர் ப்ருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.