விஜய் Television Awards- யார் யாருக்கு என்னென்ன விருது கிடைத்தது, முழு விவரம்!!

1009

Vijay Tele Awards…

விஜய் தொலைக்காட்சி மக்கள் விரும்பும் டிவிகளில் ஒன்றாக உள்ளது.

ஹிட்டான ஷோக்கள், சீரியல்கள், மக்களுக்கு பிடித்த சீரியல் ஜோடிகள் என இந்த தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர்.

வருடா வருடம் விஜய் தொலைக்காட்சியில் Tele Awards என்ற ஒன்று நடக்கும். கடந்த வருடம் தான் கொரோனா காரணமாக எந்த ஒரு விருது விழாவும் நடக்கவில்லை.

இந்த வருடம் கோலாகலமாக விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று (ஏப்ரல் 1) பிரம்மாண்டமாக நடந்தது.

விருது விழாவில் பிரபலங்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சரி இந்த வருடம் யார் யாருக்கு விருது கிடைத்துள்ளது என்ற விவரங்களை பார்ப்போம்.

  • சிறந்த மருமகள்- ஆல்யா மானசா (ராஜா ராணி 2)
  • சிறந்த அப்பா- மனோஹர்
  • சிறந்த வில்லி- பரீனா (பாரதி கண்ணம்மா)
  • சிறந்த துணை நடிகை- ஹேமா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)
  • சிறந்த இயக்குனர்- பிரவீன் பென்னட் (பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2)
  • Trending Pair- ஷிவாங்கி, அஷ்வின்
  • சிறந்த குழந்தை நட்சத்திரம்- நிவாஷினி (செந்தூரப் பூவே)
  • பேவரெட் நிகழ்ச்சி- குக் வித் கோமாளி 2
  • சிறந்த அம்மா- சுசித்ரா (பாக்கியலட்சுமி)
  • சிறந்த காமெடியன்- புகழ்