ஒரே நாளில் விருதுகளைப் பெறும் ரஜினி – தனுஷ்!

129

ரஜினிகாந்த்-தனுஷ்…

தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் ரஜினிகாந்த், தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள தனுஷ் ஆகிய இருவருக்கும் ஒரே நாளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்தவாரம் 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் அசுரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய, நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது பெறுவதாக அறிவித்தார்.

இந்திய சினிமாவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான இதனை ரஜினி பெறுவது குறித்து, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் 67வது தேசிய விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம், அதாவது மே 3-ஆம் தேதி நடைபெறும் என்றும், அதே நாளில் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட ரஜினிகாந்துக்கும் விருது வழங்கப்படும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

அதன்படி ரஜினி மற்றும் தனுஷ் இருவரும் ஒரே நாளில் விருது வாங்குவது உறுதியாகியிருக்கிறது. இரண்டு உயரிய விருதுகளையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வாங்குவது, ரசிகர்களிடையே ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.