சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த வருங்கால சந்தானம்.. சுக்கிரன் உச்சத்தில் இருக்கார் போல!!

104

புகழ்…

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்புவின் அடுத்த ரிலீஸுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு. தற்போது மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். மேலும் பிரேம்ஜி, கருணாகரன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் தற்போது புதிதாக மாநாடு படத்தில் இணைந்துள்ளார் குக் வித் கோமாளி பிரபலம் புகழ்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருப்பவர் புகழ். குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு பிறகு அவரது சினிமா மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

அந்த வகையில் வலிமை, தளபதி 65, விஜய் சேதுபதி பொன்ராம் படம், சந்தானம் படம் என புகழ் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக பல படங்கள் ரிலீஷுக்கு வரிசை கட்டுகின்றன.

அடுத்த வருடத்தில் சந்தானம் விட்ட இடத்தை தமிழ் சினிமாவில் புகழ் நிரப்புவார் என்று இப்போது அவரின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. சிம்பு தனக்கு பிடித்தவர்களை உயரத்தைவிட என்னைக்கும் யோசித்ததே கிடையாது.

அப்படி விஜய் டிவியில் நல்ல நல்ல காமெடி செய்து கொண்டிருந்த சந்தானத்திற்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்து முன்னணி காமெடியனாக உயர்த்தி விட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே.