சமூக வலைதள பக்கத்தில் கண்ணீருடன் பேசிய குக் வித் கோமாளி தர்ஷா குப்தா! என்ன காரணம் தெரியுமா?

80

தர்ஷா குப்தா….

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாக உள்ளனர்.

அந்த வகையில் பலரும் எதிர்பார்த்து வந்த பைனல்ஸ் நிகழ்ச்சி குக் வித் சீசன் 2-வில் விரைவில் நடைபெறவுள்ளது.

இதற்காக ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அவளோடு காத்துகொண்டு இருக்கின்றனர். மேலும் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, பவித்ரா உள்ளிட்டோர் பைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி, செந்தோரப்பூவே உள்ளிட்ட விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தர்ஷா குப்தா.

மேலும் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் வந்துள்ளார், அப்போது அவர் திடீரென்று கண்ணீருடன் அழுத படி சோகமாக பேசியுள்ளார்.

ஆம், தர்ஷா குப்தா உதவியாக ஒரு சில நகைகளின் விளம்பரத்தை பதிவிடுவதாக இருந்தாராம். ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் விளம்பரங்களை பதிவிட முடியவில்லையாம்.

இதன் காரணமாக தர்ஷா குப்தா ஏமாற்றுவதாக இணையத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இதனால் மனமுடைந்து போன தர்ஷா கண்ணீருடன் அழுத படி ரசிகர்களுக்கு இது குறித்து தெளிவு படுத்தியுள்ளார்.