சீரியல், சினிமா பிரபல நடிகரை கேவலமான செயலை செய்ய கூப்பிட்ட சம்பவம் : அதிர்ச்சியான இளம் ஹீரோ!!

976

சினிமா வட்டாரத்தை அண்மையில் சீரழித்த நிகழ்வு Me Too பாலியல் பிரச்சனைகள் தான். நடிகைகள் பலரும் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் பற்றி இதில் பகிரங்கமாக புகார் அளித்தார்கள்.

இந்நிலையில் தற்போது முதன் முதலாக நடிகர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அவர் வேறு யாருமல்ல ஹிந்தி சினிமாவை சேர்ந்த விவேக் தஹியா தான்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த அவர் பெரிய சினிமாவுக்குள்ளும் வந்துவிட்டார். அவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

இதில் அவர் பட வாய்ப்புகளுக்காக சினிமா மீடியேட்டர்களை அணுகிய போது தன்னை தவறான பாதைக்கு அழைத்தார்கள். ஆனால் அந்த மாதிரியான கேவலமாக செயல்களில் ஈடுபட மனமில்லாமல் அதனை ஒதுக்கிவிட்டேன் என கூறியுள்ளார்.