தளபதி 65 படத்தில் விஜய்க்கு இப்படிபட்ட கதாபாத்திரமா?- கசிந்த தகவல்!!

107

தளபதி 65…

மாஸ்டர் படம் கடந்த வருடமே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

ஒருவழியாக இந்த வருட ஆரம்பத்திலேயே வெளியானது. அப்படத்தை தொடர்ந்து விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கதாக இருந்தது.

ஆனால் என்ன காரணம் என்பது தெரியவில்லை, முருகதாஸ் படத்தில் இருந்து விலகினார். பின் பல இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்த விஜய் இறுதியாக டாக்டர் பட புகழ் நெல்சன் கதையை தேர்வு செய்துள்ளார்.

படத்திற்கான பூஜை அண்மையில் சன் பிக்சர்ஸ் இடத்தில் நடந்தது, அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. படத்தின் படப்பிடிப்பு பூஜைக்கு பின் இரண்டு நாள் அங்கு நடந்தது.

தற்போது அடுத்தகட்டமாக ஏப்ரல் 24ம் தேதி இருந்து படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்க உள்ளதாம்.

இந்த நிலையில் தான் படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது படத்தில் விஜய் ஒரு ரகசிய உளவுத்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தி கசிந்துள்ளது.