சுல்தான் படத்தில் கார்த்தியை விட இவர் தான் பெஸ்ட்.. மொத்த பாராட்டையும் அள்ளிச் செல்லும் பிரபலம்!!

184

சுல்தான்…

கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சுல்தான் படத்தில் கார்த்தியை விட குறிப்பிட்ட பிரபலம் ஒருவருக்குத்தான் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு மிகப்பெரிய படமாக வெளியான திரைப்படம் தான் சுல்தான். கார்த்தி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளியான சுல்தான் படத்தை சிவகார்த்திகேயனின் படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருந்தார்.

சுல்தான் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு படத்தின் சாயல் அதிகமாக இருப்பதாகவும் தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையெல்லாம் தாண்டி கார்த்தியின் சினிமா கேரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாகவும் சுல்தான் படம் மாறியுள்ளது. இதில் கார்த்தி, ரஷ்மிகா மந்தனா, நெப்போலியன், மலையாள நடிகர் லால் ஆகியோர் நடித்திருந்தாலும் யாருடைய கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் பதியவில்லை.

ஆனால் சுல்தான் படத்தில் பின்னணி இசையமைத்திருந்த யுவன் சங்கர் ராஜா ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளார். மாஸ் கட்சிகளுக்கு யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பிரமாண்டமாக இருப்பதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதன்காரணமாக அடுத்ததாக யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகும் வலிமை படத்தை தான் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கார்த்தி படத்திற்கே இப்படி மியூசிக் போட்டிருக்கிறார் என்றால் கண்டிப்பாக வலிமை படத்தை மிரட்டி விடுவார் என தல ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.