தனுஷ் மாஸ்டர் படத்திற்கு சப்போர்ட் பண்ண காரணம் இதுதானா? எல்லாம் தளபதி 65 மாயம் தான்!

92

தனுஷ்…

தியேட்டர் தொழில்களே மொத்தமாக மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட போது விஜய்யின் மாஸ்டர் படம் தான் அனைவரையும் காப்பாற்றியது. இதை யாராலும் மறுக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படத்தின் வெளியீட்டின்போது தனுஷும் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு மிகவும் சப்போர்ட் செய்தார்.

இந்திய சினிமாவில் உள்ள மிகப் பெரிய நடிகர்கள் அனைவரும் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யலாமா என யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அசால்டாக தன்னுடைய மாஸ்டர் படத்தின் மூலம் தெம்பை கொடுத்தார் விஜய்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு நேரடியாக ஓடிடியில் வெளியாக இருந்த பல முன்னணி நடிகர்களின் படமும் அதிலிருந்து பின்வாங்கி தியேட்டர் வெளியீட்டை உறுதி செய்தனர். அந்த வகையில் தனுஷின் ஜகமே தந்திரம் படமும் வெளியாக இருந்தது.

ஆனால் தயாரிப்பாளர் செய்த குளறுபடியால் அந்த படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தொடர்ந்து விஜய்யின் படங்களுக்கும் விஜய்யின் செயல்களுக்கும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனுஷ் ஆதரவு கொடுத்து வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் ஒரு வதந்தி ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக சுற்றிக்கொண்டிருக்கிறது.

அதாவது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் தனுஷ் ஒரு கேமியோ ரோல் செய்ய உள்ளார் என்ற செய்தி தான். இது உண்மையில்லை என தெரிந்தும் இது நடந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இடையில் ஒரு நல்ல உறவு உள்ளது குறிப்பிடத்தக்கது.