வேலவன் ஸ்டோரில் தாறுமாறாக ஷாப்பிங் செய்த விஜய் டிவி சுனிதா.. வைரல் வீடியோ!

81

சுனிதா…

1988ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தங்கவேல் மற்றும் வேலவன் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ். இந்த கடையில் வீட்டு உபயோக பொருட்கள், ஆடைகள், ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் மிக குறைந்த விலையில் கிடைத்தால் தூத்துக்குடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் வேலவன் ஸ்டோர்ஸ் சென்னையில், டி நகர் உஸ்மான் ரோட்டில் மிக பிரம்மாண்டமாய் 7 அடுக்கு மாடியாக உருப்பெற்று இருப்பதோடு, பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி தளங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்தக் கடையை நோக்கி குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த கடையில் பண்டிகைக்கு பல தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கு அளிக்கப்பட்ட ஆஃபர்களும் மக்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் இந்த கடையில் ஏற்கனவே வனிதா விஜயகுமார், மணிமேகலை, புகழ், ஷிவாங்கி, பாலா, தங்கதுரை, வினோத், ஜாக்குலின், தீபா என பல சினிமா துறை பிரபலங்கள் ஷாப்பிங் செய்ததோடு, தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு நடிகை சுனிதா சென்றதோடு, அங்கு தொகுப்பாளர் வைரமுடன் இணைந்து ஷாப்பிங் செய்துள்ளாராம்.

அதாவது சாதாரண மக்களை மட்டும் இல்லாமல் திரைத்துறை பிரபலங்களையும் தன்பால் ஈர்த்துள்ளது வேலவன் ஸ்டோர்ஸ். ஏனென்றால் குறைந்த விலை, நிறைந்த தரம் என்ற சொல்லுக்கேற்ப இருப்பதால் பல திரையுலக பிரபலங்களின் ஃபேவரட் கடையாக வேலவன் ஸ்டோர்ஸ் திகழ்ந்து வருகிறது.

இப்படி இருக்க நடன கலைஞரும் நடிகையுமான சுனிதா தொகுப்பாளர் வைரமுடன் இணைந்து வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தொகுப்பாளர் வைரம் சுனிதாவுக்கு புடவை கட்டி விட்டுஉள்ளாராம். இதற்கு பதிலாக சுனிதா VJ வைரத்திற்கு ‘ஐ லவ் யு’ சொல்லியுள்ளார்.