புது ஐடியாவ வச்சி கெத்து காமிச்ச விஜய் ஆண்டனி.. இந்த மனுஷனுக்குள்ளயும் பல விஷயம் இருக்கே!

103

விஜய் ஆண்டனி….

தமிழ்சினிமாவில் விசித்திரமான படத்தலைப்பு வித்தியாசமான கதைகளில் நடிப்பவர்தான் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன், எமன் மற்றும் சைத்தான் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகர்களுக்கு பல ஹிட் பாடல் கொடுத்த விஜய் ஆண்டனி ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோவாக கலக்கினார். இவர் ஹீரோவாக நடித்து வெளியான பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

அதன் பிறகு முழுநேர நடிகராக விஜய் ஆண்டனி மாறினார். முதன்முதலில் sneak peek என்ற வீடியோவை அறிமுகப்படுத்தியவர் விஜய் ஆண்டனி தான். அதாவது யூட்யூபில் முதன்முதலில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில்தான் sneak peek வீடியோவாக வெளியிட்டனர்.

அதற்குக் காரணம் அப்போது டீசர் மற்றும் டிரைலர் ரெடி பண்ண முடியாமல் படக்குழு தவித்தனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் டைட்டில் சைத்தான் என்பதால் பல ரசிகர்களுக்கும் இப்படத்தின் மீதான கியூரியாசிட்டி உருவானது.

அதனால் படக்குழு என்ன செய்வது என தெரியாமல் கடைசியாக படத்திலிருந்து ஒரு சில காட்சிகளை எடுத்து sneak peek ஆக வெளியிட்டனர். அதன்பிறகுதான் பல படங்கள் இம்முறையை பயன்படுத்தி தங்களது படத்தினை ப்ரோமோஷன் செய்தனர்.

தற்போது பல படங்கள் யூடியூபில் sneak peek ஆக வெளியிடுகின்றனர். ஆனால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் விஜய் ஆண்டனி தான் என்பது பலருக்கும் தெரியாது.