திருமண கோலத்தில் தனது ஆண் நண்பருடன் குக் வித் கோமாளி பவித்ரா – ரசிகர்கள் ஷாக்!!

88

பவித்ரா லட்சுமி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகை பவித்ரா லட்சுமி.

ஆம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழுடன் பவித்ரா இணைந்து செய்யும் நகைச்சுவைகள் பல ரசிகர்களை கவர்ந்தது.

இந்த வாரத்தின் எபிசோடில் பவித்ராவுடன் அவரது ஆண் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் யார் என்பது பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பவித்ராவுடன் வந்த நபருடன் திருமண கோலத்தில் பவித்ரா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர். ஆனால் இது விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டது என தற்போது தெரியவந்துள்ளது.