பாலிவுட்டில் ரீமேக்காக்கும் மாஸ்டர் ! படத்திற்காக காத்திருக்கும் முன்னணி கான் நடிகர்..!

69

மாஸ்டர்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர், இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

மேலும் இப்படம் குறித்து பல விஷயங்கள் இணையத்தில் வெளியாகி பெரியளவில் ட்ரெண்டாகி வரும், அந்த வகையில் தற்போது ஒரு தகவல் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

ஆம், மாஸ்டர் படத்தை தற்போது பாலிவுட் முன்னணி நிறுவனம் ஒன்று ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இதில் பிரபல முன்னணி நடிகர் சல்மான் கானை நடிக்கவைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

சல்மான் கானை சந்தித்த அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், இப்படத்தின் கதை அவருக்கு பிடித்து போனதால் மாஸ்டர் படத்தின் ரீமேக்கிற்கு ஓகே கூறியுள்ளார் சல்மான்.

ஆனால் மாஸ்டர் பட ரீமேக்கின் முழுமையான கதைக்காக சல்மான் கான் காத்திருப்பதாகவும்,

இது குறித்து பின் வரும் நாட்களில் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.