அந்த படத்தை ரீமேக் பண்றோம், 100 கோடி வசூல் அடிக்கிறோம்.. பிரபல நடிகரின் கனவில் மண்ணைப் போட்ட சூர்யா!!

181

சூர்யா…

சூர்யாவின் படம் ஒன்றை எப்படியாவது ரீமேக் செய்து விடலாம் என கனவு கண்டுகொண்டிருந்த பிரபல முன்னணி நடிகரின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார் சூர்யா என்பதுதான் சினிமா வட்டாரங்களில் பேச்சாக உள்ளது.

கடந்த 6 வருட காலம் சூர்யாவுக்கு நரக காலம் தான். சூர்யா எடுத்த ஒவ்வொரு புதிய முயற்சிகளும் தோல்வியையே தழுவியது. இதன் காரணமாக தன்னுடைய மார்க்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்.

போதாக்குறைக்கு தெலுங்கில் நம்பர் ஒன் தமிழ் நடிகராக இருந்த சூர்யா தற்போது அந்த இடத்தை பறிகொடுத்து விட்டார். இதனால் எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.

சூர்யாவின் வழக்கமான மாஸ் படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக உருவாகியிருந்த இந்த படம் வெகுவாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. சூரரை போற்று படம் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் சூர்யாவின் மார்க்கெட்டை இரண்டு மடங்காக மாறியிருக்கும்.

ஆனால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானதால் தன்னுடைய சினிமா மார்க்கெட்டை அவரால் நிலைப் படுத்த முடியவில்லை. இருந்தாலும் நல்ல படம் என்பதால் அடுத்தடுத்து சூர்யா நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ஹிந்தியில் மட்டும் வெளியாகாமல் இருந்தது. அதற்கு காரணம் இந்து முன்னணி நடிகர் ஷாகித் கபூர் அந்த படத்தை ரீமேக் செய்ய ஆசைப்பட்டாராம்.

ஆனால் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை ஊடான் என்ற பெயரில் இந்தியில் டப் செய்து ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் வெளியிடப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதன் காரணமாக பெருத்த ஏமாற்றத்தில் உள்ளாராம் ஷாகித் கபூர். ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட்டடித்த பல படங்களின் ஹிந்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்.