அதுலாம் என்னங்க படம், அஜித்தின் வலிமை அதைவிட 4 மடங்கு இருக்கும்.. ரசிகர்களை வெறியேற்றிய முக்கிய பிரபலம்!!

82

வலிமை…

கடைசியாக அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படம் வெளியானது. அதன் பிறகு ஒன்றரை வருடம் ஆச்சு. அஜித் படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், வினோத் இயக்குகிறார் என்பதும் அந்த படத்தை போனிகபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார் என்பது மட்டுமே தெரியும்.

ஒரு வருடத்திற்கு மேலாக தல ரசிகர்களை சமூகவலைதளத்தில் கதறவிட்ட போனிகபூர் ஒரு வழியாக அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட போவதாக அறிவித்திருந்தார்.

வலிமை படத்தில் முக்கிய அம்சமாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஆக்சன் காட்சிகளை தான். ஏனென்றால் வலிமை படம் ஒரு பக்கா ஆக்ஷன் படம் என்று ஆரம்பத்திலிருந்தே பரபரப்பை பற்ற வைத்து விட்டனர்.

இந்நிலையில் வலிமை படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வரும் திலிப் சுப்புராயன் ஏற்கனவே வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பணியாற்றியிருந்தார். அந்த படத்தில் திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து திலிப் சுப்புராயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தீரன் அதிகாரம்ஒன்று படத்தை விட வலிமை படத்தில் நான்கு மடங்கு அட்டகாசமான சண்டை காட்சிகள் இருக்கும் என கூறி தல ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்.