வசூலில் தெறிக்கவிடும் கார்த்தியின் சுல்தான்- இதுவரையிலான முழு வசூல் விவரம்!!

90

சுல்தான்…

நடிகர் கார்த்தி அடுத்தடுத்து தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், கடைக்குட்டி சிங்கம், கைதி, பையா என இவர் நடித்த படங்கள் சில பெரிய ஹிட்டடித்துள்ளன.

வசூல் ரீதியாக மட்டும் இல்லாமல் மக்களின் மனதிலும் நிற்கும் படங்களாக அமைந்துள்ளது.

இப்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணம் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

படம் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ. 14ல் இருந்து 15 கோடி வசூலித்துள்ளதாம்.

அதோடு உலகம் முழுவதும் படம் இதுவரை 24 கோடிக்கு வசூலித்து சாதனை படைத்துள்ளது.

கார்த்தியின் சினிமா பயணத்திலேயே வசூல் ரீதியாக இது சிறந்த படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.