‘சுனிதா அக்கா என்னால நிறைய Face பண்ணிருக்காங்க’.. ரியாலிட்டி ஷோவில் கண் கலங்கிய சிவாங்கி!

134

சிவாங்கி…

விஜய் டிவியில் ஞாயிற்றுக் கிழமை வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பாடகர்கள், ஆங்கர்கள், கலக்கப்போவது யாரு பிரபலங்கள், சீரியல் நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு தரப்பினரும் தங்களது தரப்புக்காக பேசவும், ஆடிப் பாடவும் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி தரப்பில் இருந்து பங்கேற்று பேசிய சிவாங்கி, ‘இப்போதெல்லாம் சிவாங்கி பிள்ளை சிவாங்கி பிள்ளை என குக் வித் கோமாளி சீசன் 1-ல் குழந்தையாகவும், சீசன் 2ல் ஜெனிலியா போன்று ஜாலியாகவும் பார்க்கிறார்கள்.

பள்ளியில் இருந்து கலாய்க்கப்பட்ட என் குரலே இப்போது ப்ளஸ் ஆகிவிட்டது. குக் வித் கோமாளி ஷோ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் அண்ணா எனக்கு படவாய்ப்புகள் கொடுத்தார்கள்’என்று குறிப்பிட்டுள்ளார்.

‘யாரையுமே உள்நோக்கத்துடன் கலாய்த்ததில்லை. சுனிதா அக்காவை நிறைய முறை கலாய்த்துள்ளேன். அவங்க என்னால் நிறைய சந்தித்துள்ளார்கள். அவை எல்லாமே பெர்சனல் கிடையாது.

எல்லாமே ஜாலிக்காக தான். ’என்று சொன்னதும் ‘ஐயோ.. லவ் யூ சிவாங்கி’ என சுனிதா சிவாங்கிக்கு பதில் அளித்தார். சிவாங்கி இப்போது படுபிஸியாகவும் ட்ரெண்டிங்காகவும் திகழ்கிறார்.

அண்மையில் கவின், தேஜூ அஸ்வினி நடிப்பில் வெளியான AskuMaaro வீடியோ ஆல்பத்தில் பாடி நடித்த சிவாங்கி, சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும் நடித்திருக்கிறார்.