‘கர்ணன்’ ரிலீஸ் குறித்து தனுஷின் முக்கிய அறிவிப்பு!

68

தனுஷ்…

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் உருவான ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் முடிந்தவுடன் தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று ஒரு செய்தி வெளியாகி கொண்டு வருகிறது.

அவ்வாறு தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு விதித்தால் ’கர்ணன்’ ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்படும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறின.

இந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ’கர்ணன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார். இதனை அடுத்து ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9-ம் ரிலீஸ் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அட்டகாசமான ’கர்ணன்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் என்பதும் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ’கர்ணன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ள நிலையில் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.