பிரியா பவானி சங்கர்…

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா மற்றும் த்ரிஷா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் அதிக படங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இளம் நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் முதல்முறையாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நயன்தாரா நடித்த ‘ஐரா’ என்ற படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கி வரும் அடுத்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் இந்த படத்தில் ஒரு டிவி ரிப்போர்ட்டராக நடிக்கிறார் என்றும் ஒரு கொலையை அவர் துப்பறிவது தான் இந்த படத்தின் கதை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்த படத்தில் மெட்ரோ சிரிஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும் அவர் ப்ரியா பவானி சங்கருக்கு ஜோடி இல்லை என்றும் பிரியா பவானி சங்கர் கண்டுபிடிக்கும் கொலை வழக்கில் அவர் உதவியாக இருப்பது போன்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த இர்பான் மாலிக் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும்,

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதியில் நடைபெற்று வருவதாகவும் இருப்பினும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் தான் படமாக்கப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது.


