அட்லீ-விஜய் கூட்டணி மீண்டும் அமைகிறதா?- சத்தமே இல்லாமல் நடந்த விஷயம்!!

92

அட்லீ-விஜய்…

சினிமாவில் ஒரு கூட்டணியில் வந்த படம் ஹிட்டடித்து விட்டால் மீண்டும் மீண்டும் அவர்கள் இணைய வேண்டும் என மக்கள் விரும்புவார்கள்.

அப்படி தமிழ் சினிமாவில் ஹிட்டான கூட்டணியில் ஒன்று விஜய்-அட்லீ இணையும் படங்கள். அவர்கள் இதுவரை தெறி, மெல்சல், பிகில் என 3 படு ஹிட்டான படங்களை கொடுத்துள்ளார்கள்.

பிகிலை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லீயுடன் கூட்டணி அமைக்கிறார் என்றார்கள். ஆனால் விஜய்யோ, லோகேஷ் கனகராஜ் கதையை தேர்வு செய்து மாஸ்டர் என்கிற படத்தில் நடித்தார்.

அப்படத்தை தொடர்ந்து விஜய், முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது, ஆனால் ஏதோ பிரச்சனை காரணமாக அவர்களது கூட்டணி அமையவில்லை.

எனவே விஜய், டாக்டர் பட புகழ் நெல்சனின் கதையை தேர்வு செய்ய இப்போது படத்தின் வேலைகளும் ஆரம்பித்துவிட்டன. அண்மையில் படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் 2 நாள் நடந்தது.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த பட லிஸ்டில் அட்லீ இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்த அட்லீ ஒரு புதிய கதையின் ஒன்-லைன் கூறியதாகவும் அது விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாக கூறுகின்றனர்.

எனவே விஜய்யின் 66 அல்லது 67வது படம் அட்லீயுடன் இருக்கும் என சில தகவல்கள் வருகின்றன.