பெண் வேடம் போட்டு ஆளே மாறிய நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் செந்தில்!!

509

செந்தில்…

சின்னத்திரையில் சில நடிகர்கள் உள்ளார்கள், எந்தவித கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக நடிப்பார்கள்.

அப்படி ஒரு நடிகர் தான் செந்தில். இவர் ஒரு ரேடியா ஜாக்கி, ஆனால் அப்போது அவரை மாயனாக தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். காரணம் அந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார். காமெடியானால் கலக்குவார், மாஸான காட்சி என்றாலும் அதகளம் செய்வார்.

இப்போது ஓடிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இவர் செய்யும் அட்டகாசங்கள் ஏராளம். தற்போது கூட ஒரு சீனிற்காக பல வேடங்கள் போட்டுள்ளார்.

அதில் ஒன்று தான் பெண் வேடம், அந்த காட்சிகள் இன்று தான் ஒளிபரப்பாகவுள்ளது. ஆனால் அதற்குள் அந்த லேடி கெட்டப் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம செந்திலா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். அதோடு இன்று இந்த காட்சிக்காகவே பார்க்க வேண்டும் என்றும் கமெண்ட் செய்கின்றனர்.