தளபதி 65 படம் இப்படி தான் இருக்கும் – முதல்முறையாக ரகசியத்தை கூறிய நடிகை பூஜா ஹெக்டே!

72

தளபதி 65…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் தளபதி விஜய் மற்றும் படக்குழுவினர்களுடன் நடைபெற்றது, மேலும் அதன் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் செம வைரலானது.

இந்நிலையில் இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை பூஜா ஹெக்டே இப்படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

ஆம் அதில் “ரொம்ப சந்தோசம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சார் ஹீரோனா எப்படியிருக்கும்? வானத்துல பறந்துட்டு இருக்கேன். இயக்குநர் நெல்சன் கதை சொன்னதுமே படத்தை மிஸ் பண்ணக் கூடாதுனு முடிவு பண்ணிட்டேன். ரசிகர்கள், கொண்டாடித் தீர்த்துடுவாங்க.

அப்படியொரு மாஸ் கதை, படத்துலயும் நான் அழகா தெரிவேன். ஏன்னா, ‘ராதே ஷ்யாம்’ கேமராமேன் மனோஜ் பரமஹம்சா சார் தான், #விஜய்65 க்கும் ஒளிப்பதிவு பண்றார்! ஷூட்டுக்காக “I am Waiting” என கூறியுள்ளார்.