முதன்முறையாக ரசிகரிடம் கோபத்தை காட்டிய அஜித், ஷாக்கான மக்கள்- ஆனால் எதற்காக தெரியுமா?

164

நடிகர் அஜித்…

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்தமான வழியில் பயணம் செய்து வருபவர். சினிமாவை தாண்டி தனது பிடித்தமான நிறைய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில் து.ப்.பா.க்.கி சு.டு.ம் போட்டியில் பங்குபெற்று விருது எல்லாம் பெற்றார். அதை அவரது ரசிகர்கள் தாங்களே ஜெயித்தது போல் கொண்டாடினார்கள்.

இன்று என்ன நாள், அனைவரும் ஓட்டு போட வேண்டிய நாள். எனவே அஜித் எப்போதும் போல முதல் ஆளாக வரிசையில் நின்று ஓட்டுபோட்டுவிட்டு சென்றுள்ளார்.

கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் முகக்கவசம், இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் அஜித்தை கண்ட ரசிகர்கள் வழக்கம் போல் அவரை சூழ்ந்துவிட்டனர், அதுவும் முகக்கவசம் என எதுவும் இல்லாமல் ஒரு ரசிகர் பக்கத்தில் சென்று செல்பி எடுத்துள்ளார்.

எப்போதும் எல்லா விஷயங்களிலும் சரியாக இருக்கும் அஜித் ரசிகர்கள் தன்னை ரசிகர்கள் முகக் கவசம் எல்லாம் இல்லாமல் சூழ்வதை கண்டு கோபம் அடைந்துள்ளார். ஒரு ரசிகர் செல்பி எடுக்க அவரது போனை கோபமாக பிடிங்கியுள்ளார்.