பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படம் எப்போது ரிலீஸ்- அதிகாரப்பூர்வ தகவல்!!

95

பொன்னியின் செல்வன்…

கல்கி கிருஷ்ண மூர்த்தி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் என்கிற நாவல் மக்களிடம் மிகவும் பிரபலம்.

அந்த நாவலை தழுவி மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் என்கிற பெயரிலேயே படம் இயக்கி வருகிறார்.

இதில் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், விக்ரம் பிரபு என பலர் நடிக்கிறார்கள்.

அண்மையில் சுல்தான் படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் கார்த்தி லைவ் சாட் வந்துள்ளார். அப்போது அவர், பொன்னியின் செல்வன் படம் அழகாக தயாராகி வருகிறது. இதுவரை 70% படப்பிடிப்பு முடிந்துள்ளது.

கொரோனா பிரச்சனையால் படத்தின் சில வேலைகள் தாமதம் ஆகிறது. படத்தை 2022 பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸிற்கு எதிர்ப்பார்க்கலாம் என கூறியுள்ளார்.