தல பிறந்தநாளுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே நாளில் இரண்டு சர்ப்ரைஸ் கொடுக்கும் வலிமை படக்குழு!!

97

வலிமை…

அஜித் நடிப்பில் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இதனால் தல ரசிகர்கள் தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்த வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு தீனி போடும் வகையில் ஃபுல் மீல்ஸ் ஆக உருவாகி வருகிறது வலிமை திரைப்படம். ஆக்ஷன் சென்டிமென்ட் என பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகிவரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தல அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது ஏற்கனவே தெரிந்த செய்திதான்.

இதற்காக ஏற்கனவே சமூக வலைதளங்களில் உள்ள மற்ற நடிகர்களில் சாதனைகளை பட்டியலிட்டு அவற்றை முறியடிக்கும் நோக்கத்தில் தல ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர். கண்டிப்பாக வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சரித்திர சாதனை படைக்கும் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

இது ஒருபுறமிருக்க படக்குழுவினர் தல அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வலிமை படத்தின் தீம் மியூசிக் உடன் சேர்ந்த மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட உள்ளதாம்.

யுவன் சங்கர் ராஜா வலிமை படத்திற்கு இசையமைக்கும் போதெல்லாம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறி ஏற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி என்றாலே பின்னணி இசைக்கு குறைச்சல் இருக்காது. மேலும் வலிமை படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாகவும் ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் உலா வருகின்றன. எது எப்படியோ இந்த முறை தல ரசிகர்களின் கொண்டாட்டம் வேற லெவலில் இருக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.