பிக் பாஸ் 5ல் தொகுப்பாளினி பிரியங்கா- புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்!!

118

பிரியங்கா தேஷ்பாண்டே…

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 8, ஸ்டார்ட் ம்யூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

விஜய் டிவியின் முன்னணி பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் 5ஆம் சீசன் வரும் ஜூன்,ஜூலை மாதம் துவங்கவிருக்கிறது. இதில் விஜய் டீவியை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் confession roomல் தொகுப்பாளினி பிரியங்கா இருப்பது போல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனால் பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள போகிறார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இந்த புகைப்படம் பிக் பாஸ் சீசன் 1ல் பிரியங்கா விருந்தினராக வந்து போது எடுத்து என்று தெரியவந்துள்ளது.