சங்கர், ராம்சரண் கூட்டணியில் இணைந்து பாலிவுட் முன்னணி நடிகர்? டாப் ஹீரோவாச்சே, அவர் எப்படி இதுல?

78

சல்மான்கான்…

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு சங்கர் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் உருவாக உள்ளது.

மேலும் ஷங்கரின் இந்த படத்தில் அனைத்து மொழிகளுக்கும் தெரிந்த முகங்களை தேடித்தேடி எடுத்து வருகிறார்களாம். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட செலவு வைக்கும் சங்கர் தெலுங்கு தயாரிப்பாளர்களிடம் சரணடைந்து விட்டதாக செய்திகள் வெளியானது.

இதுவே ஷங்கரின் மீது என ஒரு கெட்ட பார்வையை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திவிட்டது. இருந்தாலும் சங்கர் அடுத்தடுத்து தெலுங்கு ஹிந்தி என செல்ல உள்ளதால் இன்னும் சில வருடங்களுக்கு தமிழ் தயாரிப்பாளர்களை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

ஷங்கரின் படங்களில் எப்போதுமே பிரம்மாண்டத்திற்கு குறைச்சல் இருக்காது. அதேபோல் அவரது படங்களில் நடிக்கும் நடிகர்களும் அதிக அளவில் பிரபலமானவர்களாகவே இருப்பார்கள். அந்தவகையில் ராம்சரண் மற்றும் ஷங்கர் இணையும் படத்தில் ஒரு புத்திசாலித்தனமான போலீஸ் கதாபாத்திரம் உள்ளது.

இந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் சல்மான்கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். சிறிது நேரமே வந்தாலும் கதைக்கு முக்கியமே அந்த கதாபாத்திரம் தானாம்.

பேன் இந்தியா மூவி என்பதால் அந்த கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகர் நடித்தால் படத்தின் வியாபாரத்திற்கு உதவியாக அமையும் என சங்கர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரும் சல்மான்கான் மண்டையை கழுவி கொண்டிருக்கிறார்களாம்.