சுல்தான் பட வசூலை மூன்று நாளில் அள்ளிய கர்ணன்.. இதுவரை கலெக்சன் எவ்வளவு தெரியுமா?

966

சுல்தான் மற்றும் கர்ணன்………..

மாஸ்டர் படத்திற்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் திரையரங்குக்கு வரவில்லை என பலரும் கவலையில் இருந்த நிலையில் அவர்களுக்கு ஜாக்பாட் அடித்ததுபோல சுல்தான் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு படங்களும் கிடைத்துள்ளது.

இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து தியேட்டர்களும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான தனுஷின் கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதையை மட்டுமே பிரதானமாக வைத்து தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அதேபோல் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் பக்கா கமர்சியல் திரைப்படமாக ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது வரை கார்த்தியின் சுல்தான் திரைப்படம் தமிழகம் முழுவதும் சுமார் 25 கோடி வசூல் செய்துள்ளதாம். ஆனால் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் முதல் நாள் 11 கோடியும், இரண்டாவது நாள் 9 கோடியும், மூன்றாவது நாள் 13 கோடியும் வசூலித்து மி ரட்டியுள்ளது.

ஆக மொத்தத்தில் முதல் மூன்று நாட்களிலேயே 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இத்தனைக்கும் சுல்தான் திரைப்படத்திற்கு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கர்ணன் முதல் நாள் மட்டுமே 100 சதவீத பார்வையாளர்களுடன் வெளியானது.

அடுத்த இரண்டு நாட்களில் வெறும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இருந்தாலும் முதல் நாளைவிட மூன்றாவது நாள் வசூல் அதிகமாக இருப்பதை பார்த்தால் இந்த வாரமே தமிழ்நாட்டில் கர்ணன் திரைப்படம் 50 கோடியை தாராளமாக கடந்துவிடும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றன.