நிவேதா தாமஸின் திறமையை பாராட்டும் ரசிகர்கள்..!

59

நிவேதா தாமஸ்…

தமிழில் ரஜினி, கமல் படங்களில் அவர்களுக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸின் தனித்திறமையை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். மேலும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்திருந்தார்.

மலையாளம், தெலுங்கு படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் நிவேதா தாமஸ், சூர்யா நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் படத்தில் இடம் பெற்ற ‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…’ என்ற பாடலை பாடி தானே இசையமைத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் நிவேதா தாமஸை புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள். மேலும் பல பாடல்களை பாடி வெளியிடுமாறும் கேட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)